அஜித்தை அசிங்கப்படுத்திய உலக அழகி..!

தல அஜித்தின் இன்றைய மார்க்கெட் எந்த லெவலில் உள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படம் வந்த காலக்கட்டத்தில் அவருக்கு அந்த அளவுக்கு மார்க்கெட் இல்லை.

வளரும் நடிகராகத்தான் இருந்தார். கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் அஜித்தோடு உலக அழகி ஐஸ்வர்யா ராய், மம்முட்டி, தபு, அப்பாஸ் ஆகியோர் நடித்து இருந்தனர்.

இந்த படத்தில் முதலில் அஜித்துக்கு ஜோடியாகத்தான் ஐஸ்வர்யா ராய்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவர் அஜித்துக்கு ஜோடியாக எல்லாம் நடிக்க முடியாது.

மம்முட்டி அல்லது அப்பாசுக்கு ஜோடியாக வேண்டுமானால் ஜோடியாக நடிக்கிறேன் என்று கூறி விட்டார். இதனால் கதையில் சிறு மாற்றங்கள் செய்து ஐஸ்வர்யா ராயை மம்முட்டி ஜோடியாக மாற்றினார்கள்.

அதே போல படப்பிடிப்பு தளத்திலும் அஜித்தை யாரும் மதிக்கவே இல்லை. மிக கேவலமாக நடத்தப்பட்டார். இதை பார்த்த மம்முட்டி இயக்குனரான ராஜிவ் மேனனை கடிந்து கொண்டாராம். ஒரு வளரும் நடிகரை இப்படி எல்லாம் நடத்த கூடாது என்றெல்லாம் கூறினாராம்.

பின்னர் கதையில் அஜித்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் மம்முட்டி மற்றும் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைப்பதா அல்லது அஜித், தபுவை சேர்த்து வைப்பதாக என்ற குழப்பம் ஏற்பட்டது.

இறுதியில் மம்முட்டி, ஐஸ்வர்யா ராய் ஜோடியை சேர்த்து வைத்து படத்தை முடித்தார்கள். படம் வெளிவந்த பெரிய வெற்றியை பெற்றாலும், கிளைமாக்ஸ் காட்சி ரசிகர்களை பெரிதாக கவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்