விஜய்யை வீழ்த்திய – தனுஷ்

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ரஜினிக்கு அடுத்து வசூல் மன்னனாக இருப்பவர் விஜய் தான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சலே இதற்கு சிறந்த உதாரணம்.
அப்படியிருக்கையில் எப்படி சூர்யா, தனுஷ் விஜய்யை வீழ்த்த முடியும் என்று நீங்கள் நினைப்பது புரிகின்றது,

அது வேறு ஒன்றுமில்லை, 10 வருடத்திற்கு முன் இதே நாளில் தான் அழகிய தமிழ் மகன், பொல்லாதவன், வேல் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது.

இதில் அழகிய தமிழ் மகனுக்கு தான் வழக்கம் போல் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்தது, ஏனெனில் விஜய் முதன் முறையாக இரட்டை வேடத்தில் இப்படத்தில் நடித்திருந்தார்.

மேலும், ஹரி இயக்கத்தில் வேல், வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் ஆகிய படங்கள் திரைக்கு வந்தது, இதில் யாரும் எதிர்ப்பாரத விதமாக அழகிய தமிழ் மகன் படுதோல்வியை அடைந்தது.

வேல் கமர்ஷியலாக பெரிய வெற்றியை பெற, பொல்லாதவன் விமர்சனங்கள் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வசூலை தந்தது.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்