நடிகையை முத்தமிட மறுத்த சம்லான் கான்

பாலிவுட் திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றால் சல்மான் கான் தான்.

இவர் நடிப்பில் கடைசியாக வந்த டியூப் லைட் படம் மட்டுமே கொஞ்சம் சறுக்கியது.

இன்னும் சொல்ல வேண்டுமென்றால் சல்மான் கான் நடிப்பில் கடைசியாக வந்த 10 படங்களில் இது தான் மிகப்பெரும் தோல்வி படமாக அமைந்தது.

இதனால், அடுத்தப்படம் பெரிய அளவில் ஹிட்டாக வேண்டும் என்று சல்மான் போராடி வருகின்றார்.

தற்போது இவர் டைகர் ஜிண்டாகி என்ற படத்தில் நடித்துள்ளார், இப்படத்தில் ஹீரோயினாக கேத்ரீனா கைப் நடித்துள்ளார், இப்படம் ஏக் தா டைகர் படத்தின் இரண்டாம் பாகமாக வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தில் சல்மான்கான், கத்ரீனா இடையே முத்தக்காட்சியை இயக்குனர் வைத்து இருந்தார். படத்துக்கு அந்த காட்சியால் கூடுதல் விளம்பரம் கிடைக்கும். படம் பிரபலமாகும் என்று இயக்குனர் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால், இதை சல்மான் முற்றிலுமாக மறுத்துள்ளார், மேலும் பலமுறை இயக்குனர் வற்புறுத்தி கூறியும், முத்தக்காட்சி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்றும் கூறியுள்ளார்.

இவை அனைத்திற்கும் முக்கிய காரணம், இதற்கு முன் சல்மான் கான், கேத்ரீனா கைப் பல வருடங்கள் காதலில் இருந்து பிரிந்தவர்கள், தற்போது படத்திற்காக தான் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

என்ன இருந்தாலும் பழைய காதலி அதனால், இந்த மாதிரி காட்சிகள் எல்லாம் வேண்டாம் என்று சல்மான் முடிவு செய்திருக்கலாம் என்று தெரிகின்றது.

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்