திருமணத்தின் ஒரு மாத நிறைவைக் கொண்டாடிய தம்பதியர் சமந்தா-நாக சைதன்யா!

திருமணம் முடிந்த பின்னர் தத்தம் பட வேலைகளில் பிஸியாகிவிட்டனர் நட்சத்திர தம்பதியர்களான சமந்தா மற்றும் நாக சைதன்யா. சமீபத்தில் தங்கள் திருமணத்தின் ஒரு மாத நிறைவை தங்களின் மனத்துக்குப் பிடித்த வகையில் கொண்டாடி மகிழ்ந்தனர்.

நாக சைதன்யா காதல் மனைவியை மகிழ்விக்க சிறப்பு விருந்து ஒன்றினை ஏற்பாடு செய்தார். சமையலில் களம் இறங்கி, பாஸ்தா உள்ளிட்ட சமந்தாவுக்குப் பிடித்தமான உணவுகளை அவரே சமைத்து அசத்தினார். சில நாட்கள் முன்னால் சமந்தா மீன் உணவொன்றைத் தயாரித்து நாக சைதன்யாவை திகைப்பில் ஆழ்த்தியிருந்தார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள சமந்தா, ‘காதல் கணவருடன் நறுமணமான பாஸ்தா, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கிறது’என்று பதிவிட்டுள்ளார்.

 

[mashshare]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிந்திய செய்திகள்

சமூக அவலங்கள்

நடப்பது என்ன

நிகழ்வுகள்

விளையாட்டு

உலகச் செய்திகள்